Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு: வருமான வரம்பு நிர்ணயத்தால் ’தங்கைகள்’ ஏமாற்றம்

‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு: வருமான வரம்பு நிர்ணயத்தால் ’தங்கைகள்’ ஏமாற்றம்

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் மட்டுமே இத்திட்டத்தில் பலனடைய முடியும்

பகிரவும் WhatsApp Facebook

திருமணமாகும் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.812 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் மட்டுமே இத்திட்டத்தில் பலனடைய முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளதால், சீர் பெறக் காத்திருந்த மணப்பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சட்டப்பேரவைதேர்தலின்போது தவெக சார்பில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இதில், 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட வாக்குறுதிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தவெக ஆட்சி அமைந்து, முதல்வராக பதவியேற்ற விஜய், அரசின் நிதிநிலைமையைச் சுட்டிக்காட்டியதுடன், தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அறிவித்தார். அதன்படி, தற்போது வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால், தேர்தலின்போது அனைவருக்கும் பொதுவான சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, தற்போது திட்டத்தை அறிவிக்கும்போது விதிமுறைகள் என்ற பெயரில் குறிப்பிட்ட சிலர் மட்டும் பயனடையும் வகையில் அறிவிப்புகள் வெளியாகி வருவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக, அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, தற்போதைய அறிவிப்பில் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

அதேபோல, `அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம். தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் எந்த இடத்துக்கும் பெண்கள் அனைவரும் கட்டணமின்றிப் பயணிக்கலாம்’ என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது குறிப்பிட்ட தொலைவு வரை இயங்கும் அரசு பேருந்துகளில் மட்டும் பெண்கள் பயணிக்கக்கூடிய அளவில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த வரிசையில், ‘நம் தங்கைகளின் திருமணத்துக்காக எட்டு கிராம் (ஒரு பவுன்) தங்கமும், தரமான பட்டுச்சேலையும் தாய் வீட்டில் இருந்து அண்ணன் சீராக வழங்கப்படும்’ என தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில், சமூகநலத் துறை சார்பில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தில் பலன் பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அதிமுக எம்.பி. இன்பதுரை கூறும்போது, “குடும்ப வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ள மணப்பெண்களுக்கு அண்ணன் சீர் வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.5 லட்சமாக சுருக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மாற்றி, மக்களை ஏமாற்றும் தவெக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது”என்றார்.

முந்தைய செய்தி
எகிறும் தங்கவிலை.. இமிடேஷன் நகைகள் பக்கம் திரும்பும் பெண்கள்!
அடுத்த செய்தி
செம்பு இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் : மின்சாரப் பொருள் வியாபாரிகள் சங்கம்

தொடர்புடைய செய்திகள்